நம்ம நித்தி Part-1…..
இப்பொ தமிழ் நாட்டுல டாப்ல இருக்குற ஆளு நம்ம நித்தி தான் ..அதனால என்னுடைய இரண்டாம் பதிப்பு நம்ம நித்தி தான் …
இந்த பேட்டில யாருலாம் கலந்துக்க போறாங்கனு பார்தீங்கனா நம்ம
1)நித்தி
2)ரஞ்சிதா
3)அப்புறம் நம்ம பெருசு ..அதாங்க நம்ம ஆதீனம் ..
4)லாஸ்டா பேட்டி எடுக்க போற ஆளு நம்ம கௌண்ட மணி
ஸ்டார்ட் த பேட்டி…..
1)மணி:
சாம்ய் உங்க குடும்பத்த பத்தி கொஞ்சம் சொல்றீங்கலா?
நித்தி:
பேசிகலி நான் ஆச்சாரமான குடும்பத்துல பொறந்தவன்….
(மணி மைண்ட் வாய்ஸ்ல: கொயாலே!!! நீயே ஆச்சாரமான குடும்பம்னா நாங்கலாம் என்ன பாம்பே ரெட் லைட் ஏரீயாலயா பொறந்தோம்?)
2)மணி:
நித்தி உங்களுக்கு எப்படி ஞானம் வத்துச்சுனு கொஞ்சம் சொல்றீங்கலா?
நித்தி:
ஒரு நாள் நான் தியானம் பண்ணீட்டு இருந்தேன் ..அப்போ திடீர்னு ஒரு சப்தம்
(மணி மைண்ட் வாய்ஸ்ல: ஸ்டார்ட் பண்ணிடான்யா சட்டி தலயன் ….) என்னடானு கண்ணு முழிச்சு பார்தா.என் முன்னாடி தெய்வம் நிக்குது ….
மணி: அப்புறம் ….
நித்தி: என்ன ஆன்மீக சேவைல எறங்க சொல்லுச்சு …..சொ
நான் எறங்கிட்டேன்..
(மணி மைண்ட் வாய்ஸ்ல: எதோ கெணத்துகுல்ல எறங்குன மாதிரி சொல்றான் …)
3)மணி:
சரி சாமி …எப்படி இந்த மடம் லாம் கட்ட உங்களுக்கு இவ்ளோ காசு வந்துச்சு…?
நித்தி:
எல்லாம் என் ஃபான்ஸ் எனக்கு ப்ரொவைட் பண்ணியது…
(மணி மைண்ட் வாய்ஸ்ல: நீ கெட்ட கேட்டுக்கு இங்கலீசு வேற…)
4) மணி:
சாமி எப்படி உலகம் ஃபுல்லா பாபுலர் ஆனீங்க ??
நித்தி:
என் ஆன்மீக ஞானம் கண்டு உலகம் முழுக்க எனக்கு ஃபான்ஸ் வந்தாங்க …
மணி:
எது சாமி ..அந்த சன் டீவீ ல ரஞ்சி கூட பிரேக் டான்சு ஆடுனீங்கலே அதுவா?
நித்தி:சேச்ச …அதுக்கு முன்னாடியே ….
மணி:ஒ..அதுக்கு முன்னாடியே நெறயா டான்சு ஆடி இருகீங்கலா சாமி..இந்த சன் டீவீ ல ஒரு சீடி தான் போட்டாங்க..படுபாவி பசங்க….
5)
மணி:
பார்தீங்களா….ரஞ்சிதாவ பத்தி நீங்க எதுவும் சொல்லவே இல்ல…??
நித்தி:
அவரும் மற்ற பெண் சீடர்களை போல் தான் ….
மணி:
சும்மா டபாய்காதீங்க சாமி….அப்புறம் ஏன் அவங்க மட்டும் உங்களுக்கு பணிவிடை செய்றாங்க?..ஹெய் இப்போ என்ன பண்ணுவ இப்போ என்ன பண்ணுவ…
நித்தி:
எனக்கு நெறைய பெண்கள் பணிவிடை செய்கிறார்கள்…ஏண்ணிடம் வீடியோ ஆதாரம் உள்ளது…ஒரு சீடீ 30ரூபாய் ..வேண்டும் என்றால் கௌன்டெரில் பணம் கட்டி வாங்கி கொள்ளுங்கள்..
மணி:
வேண்டாம் சாமி நான் சன் டீவீலேயே பார்த்து கொள்கிறேன் ….விட்டா நீங்க என் மூடயே மாத்தி விடுவீங்க போல…
நித்தி:
ஹா ஹா ஹா…எல்லம் அவன் திருவிளையாடல்கள்…