ஜூனியர் ஆர்டிஸ்ட் – என் முதல் அனுபவப் பகிர்வு.
டீன் ஏஜ்ல எல்லாரும் அவங்கள ஹீரொவா தான் நினைபாங்க.அதுவும் வெளியில போகும் போது ஆறு தடவ தலை சீவி,மூணு தடவ பௌடெர் அடிச்சு முன்னாடி தல முடிய கொஞ்சம் கலைச்சு விட்டு (என்னயும் சேர்த்து தான் சொல்றேன்.)..தான் கெளம்புவோம். நாம எப்பவும் ஹீரோவாக தான் விரும்புவோம் .சப்பயா ஏதாவது மேட்டெர் சிக்குனா அத செஞ்சுட்டு ஹீரோ ஃபீல் குடுக்கலாம்.நமக்கும் எந்த டேமேஜும் வராது(என்னயும் சேர்த்து தான் சொல்றேன்.).ஏன்??, படத்துல கூட ஹீரொவ தான் நாம பார்ப்போம்.ஹீரொவுக்காக படம் பார்க்க போறவங்க இருக்காங்க ,பட் எங்கயாவது ஜுனியர் ஆர்டிஸ்டுக்காக படம் பார்க்க போர்ரவங்க இருக்காங்களா?.அப்படி இருந்தா அவங்காந்த ஜுனியர் ஆர்டிஸ்டோட சொந்தகாரங்களா தான் இருப்பாங்க.
ரெண்டு வாரம் முன்னாடி
அம்மா சொன்னாங்க, “டேய் விஜி,காளி அம்மன் கோவில்ல திருவிழா,கொஞ்சம் வண்டி எடுக்குறயா போய்ட்டு வரலாம்??”.
நானும் உடனே சரினு சொல்லிட்டேன்.
அம்மாக்கு ஆச்சரியம் “என்னடா உடனே சரி சொல்லிட??.சரி இரு ரெடி ஆகிட்டு வரேன்”.
அம்மாக்கு தெரியாது, நான் ஏன் உடனே வரேன்னு சொன்னேனு.
அதுக்கு மூணு ரீசன்
1)ரிசல்ட் இன்னும் வரல சொ..சாமி கிட்ட நல்ல ரிசல்டா வந்தா என் ஃப்ரண்ட் சேகர்க்கு மொட்டை அடிக்கலாம் ..இந்த மாதிரி எதாவது ஐஸ் வைக்கலாம் .
2)கோவிலுக்கு வந்தா தான் அம்மா அரிசி மாவு சாப்பிட விடுவாங்க.
3) தாவணி போட்ட வில்லேஜ் பொண்ணுங்கள பார்க்கலாம்.பிகாஸ் ..சென்னைல தாவணிய 1/4 கட் பண்ணி தான் போட்டு வருவாங்க.அங்க தாவணிய பார்க்குறது ரொம்ப கஸ்டம்.
அம்மா ரெடி.நான் பௌடெர் போட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணேன்.
அம்மா கேட்டாங்க “ஏண்டா,கோவில்க்கு தான போறொம்..ஏதோ பொண்ணு பார்க்க போர மாதிரி வெள்ள சட்டைலாம் போட்டு இருக்க?”.
நான் ஒரு ஸ்மைல் போட்டு வண்டில ஏறி உட்கார்ந்தேன் .
கோவில்ல என்டெர் ஆனோம்.ஃபர்ஸ்ட் ரிசல்ட் அப்புறம் தான் தாவணி ..சொ சாமி கிட்ட போனேன்.
சாமி கும்பிட்டு இருக்கும் போது ஒரு தாவணி போட்ட அக்கா வந்தாங்க ..நல்லா தான் இருந்தாங்க.பட் என்ன விட ஏஜ் அதிகம்.முகம் லட்சணமா இருந்துச்சு.நான் அவங்கள பார்த்துட்டு இருந்தேன் .
“டேய்……………………” நு ஒரு சவுண்டு.
“ஹையொ நாம பர்க்குரத யரோ பார்துடாங்க போல”னு கண்ண இருக்கமா மூடிகிட்டேன்.
பத்து செகண்ட் கழிச்சு ஐச ஓபென் பண்ணா ..என் பக்கத்துல ,”ஒரு அக்கா சாமி ஆடிட்டு இருக்கு…!!!!!!”
நான் அப்படியே “ஷொக்” ஆகிடேன்.
வாழ்க்கைல ஃபர்ஸ்ட் டைம் சாமி ஆடுரத பார்க்குரேன்.அந்த அக்கா புருஷன் அவங்கள புடிச்சு இழுக்க போனாங்க …அந்த அக்கா அவங்க புருஷன பார்த்து ஒரு லுக் விட்டுச்சு..அந்த அண்ணன் பயந்து பின்னாடி போய்ட்டாங்க.
பூசாரி வந்தாரு அந்த அக்கா நெத்தில திருனீரு வச்சாரு..அப்பவும் அந்த அக்கா அடங்கல.அப்புறம் கைல ஒரு எலுமிட்சம் பழம் குடுத்தாங்க..அத அந்த அக்கா சாப்பிட்ட ஸ்டைல இன்னும் என்னால மறக்க முடியல…
“உயிருல்ல கோழிய கழுத்த பிடிச்சு கடிச்சு சாப்டுரத நினைச்சு பாருங்க..”அப்படி சாப்பிட்டாங்க.
ஒரு நிமிஷம் தான் அந்த அக்கா அப்படியே நார்மல் ஸ்டேஜ்க்கு வந்துடாங்க.
உடனே பின்னாடி திரும்பி அவங்க புருஷன பார்த்து ,”என்னங்க திருனீரு எடுதுகோங்க” அப்படினாங்க.
அப்போ நான் முடிவு பன்னேன்.சத்தியமா இது நடிப்பு இல்ல…ஏன்னா சிவாஜி,கமல் நால கூட இப்படி நடிக்க முடியாது.
இருந்தும் எனக்கு ஒரு சின்ன சந்தேகம்..”அவங்க சாமி ஆடுனத அவங்கனால உணர முடிஞ்சுதா ??”.
இத கண்டுபிடிக்க அந்த அக்கா பின்னாடியே போனேன்.பட் தாவணிய மிஸ் பண்ணது தான் மிட்ச்சம்.அந்த சாமி ஆடுன அக்கா தனக்கும் அதுக்கும் எந்த ரீலேசன் இல்லாதது மாதிரி தேங்கா சாப்ட்டு இருந்தாங்க.
அப்புறம் கடுப்பாகி சாமி கும்பிட்டு கோவில்ல சுத்தி வந்தேன்.அம்மாவும் தான்.கோவில் முன்னாடி சாமி பாதம் பதிச்ச ஊஞ்சல் வச்சு இருந்தாங்க.எல்லாரும் அத தொட்டு கும்பிட்டு அதுல சில்லற காசும் வச்சாங்க.நானும் அம்மாவும் லைன்ல போய் நின்னோம்.அம்மாவுக்கு முன்னாடி அஞ்சு பேரு இருந்தாங்க .நான் அம்மா பின்னாடி நின்னேன்.
அம்மாவுக்கு முன்னாடிக்கும் முன்னாடி இருந்த அக்கா சாமி மேல ரொம்ப கடுப்புல இருந்தாங்க போல..அவங்க ஊஞ்சல ஆட்டுன ஆட்டுல ஊஞ்சல்ல இருக்குற காசு எல்லாம் கீழ சிதறி விழுந்துச்சு.அத அந்த அக்கா பார்காம ஊஞ்சல ஆட்டுரதுலயே குறியா இருந்தாங்க.அப்புறம் அந்த அக்கா திரும்பி கூட பார்க்காம போய்டாங்க.
நான் மனசுல நினைசேன் ,”சப்போஸ் ..அந்த காச யாரும் எடுத்து ஊஞ்சல் மேல திரும்ப வைக்கலனா நாம அத எடுத்து வச்சு …கொஞ்சம் ஹீரோ ஃபீல் காடாலாம்பின்னாடி இருக்குர அண்ணா அக்காலாம் நம்மல பத்தி மனசுல கொஞ்சம் நல்லாத நினைபாங்க”.
சாமி புண்ணியத்துல என் அம்மா வரைக்கும் யாரும் அத எடுத்து வைக்கல.இப்போ என் அம்மா டர்ன்.
அம்மா போனாங்க.ரொம்ப நேரம் ஊஞ்சல தொட்டு இருந்தாங்க..வேகமா ஆட்டி விட்டு இருந்தாங்க..விடவே இல்ல..நெரய வேண்டுதல் போல..”சரி ஹீரோ ரோல் சீகிரம் கிடைக்க்குமா?”, கொஞ்சம் வெய்ட் பண்ணி தான ஆகனும்.சொ, வெய்ட் பண்ணென்.அம்மா தன் பங்குங்க்கு ஒரு ஒரு ரூபாய்ய தள்ளி விட்டாங்க…(எல்லான் எனக்காக தான்)…என் டர்ன் வந்துச்சு.
திடீர்னு ஒரு பாப்பா என் காலுக்கு அடியில புகுந்து ஒடி அந்த ஊஞ்சல சிதறி இருந்த காச எல்லாம் மெதுவா எடுத்து ஊஞ்சல வச்சு ஒரே செகண்ட்ல என்ன ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆகவிட்டு அது ஹீரோ ஆகிடுச்சு?????.
எனக்கு செம பன்…பட் சைலென்ட் பன்..ஏன்னா, இது யாருக்கும் தெரியாதுல??..
என் அம்மா அந்த பாப்பாவ பார்த்து சொன்னாங்க ,”குட் கேர்ள்!!!”.
அந்த பாப்பாவ பத்தி எங்கிட்ட எங்க அம்மா பெருமயா பேசுனானங்க.அப்போ அந்த பாப்பா எங்கள கிராஸ் செஞ்சது.
ரொம்ப நாளா எண்ணெய் வைக்காத தல,அழுக்கு ட்ரெஸ்..பார்க்க பாவமா இருந்துச்சு..அப்போ சுத்தி இருந்த பொண்ணுங்கலாம் கைல பொம்மை பல்லூன்லாம் வச்சு இருந்தாங்க.
எனக்கு சட்டுனு ஒரு ஐடியா வந்துச்சு.“அந்த பாப்பாவுக்கு ஒரு கார் பொம்மை வாங்கி குடுத்து ,ஒரு “ஹீரோ ரோல்” இல்லனா கூட “கெஸ்ட் அப்பியரன்ஸாவது” ட்ரை பண்ணாலாம்னு முடிவு பண்ணேன்.ஏன்னா படத்துல கெஸ்ட் அப்பியரன்ஸ்லாம் பெரிய ஹீரோ தான தருவாங்க????.எப்படி நம்ம ஐடீயா???
வெளிய வந்தேன்..கடைய தேடினேன்.ஒரு அக்கா கருப்பு கண்ணாடி மாட்டி ஒரு சின்ன் கட்டில்ல கடை போட்டு இருந்தாங்க.அவங்க கிட்ட போனேன்.
“அக்கா,அந்த ரெட் கலர் கார் பொம்மை எவ்ளோ?”…அந்த அக்கா பேசவில்லை.
“அண்ணா…………………….” என்று ஒரு சப்தம்.
பின்னாடி திரும்பி ,”நம்மல யாருடா மரியாதயா அண்ணானு கூப்டுரது“னு பார்தேன்.
அதே பாப்பா..ஓடி வந்தது..வேகமாக.
கட்டில் அடியில் புகுந்து எந்தரித்து “கார் பொம்மை 15ரூபாய் நா” என்றது.
எனக்கு தூக்கி வாரி போட்டது.
அந்த பாப்பாவிடம் கேட்டென்..”எங்க பாப்பா படிக்குர?”.
“நான் படிக்கல நா…இது எங்க கடை தான் ,அம்மாக்கு கண் தெரியாது..வாய் பேச வராது..அப்பா கூலி வேலைக்கு போராரு”
“சாய்ங்காலம் தான் கடை போடுவோம்..”
நான்,”அப்போ,காலைல ஸ்கூல்க்கு போலாம்ல?”
“ஸ்கூல்க்கு போலாம் தான் ஆன ,எங்க அப்பா விட மாட்டென்னு சொல்லுராருனா” ,என்றாள் பாவமாக.
அப்பொழுது கடவுள் எனக்கு இரண்டு ரோல் குடுத்தார்..
1)ஹீரோ ரோல்:
அந்த பெண்ணின் அப்பாவிடம் அந்த பெண்ணை படிக்க வைக்க சொல்லி கையில் பணம் கொஞ்சம் குடுக்கலாம்.
2)ஜூனியர் ஆர்டிஸ்ட்:
கார் பொம்மையை வாங்கிக்கொண்டு அந்த பெண்ணை நினைத்து கடவுளிடம் வேண்டிக்கொள்வது.
நிட்சயம் ஒரு நாள் நான் ஹீரோ ஆவேன் என்று மனதில் நினைத்துக்கொண்டு, “ஹீரொவாக சென்ற நான்..ஜூனியர் ஆர்டிஸ்டாக வீடு திரும்பினேன்…”
அப்பொழுது உணர்தேன்..“ஹீரோ ஆவது அவ்வளவு சுலபம் இல்லை..”
sooper…
idhula irundhu enna theriyudhu nee hero aganum na neraiya bun nu vanganum :-D:-D
Reblogged this on விஜய்-In-ஜனனம்.