வசூல் ராஜா E.N.T Specialist -என் அனுபவம்
ஒரு ஆறு மாசம் முன்னாடி எனக்கு செம தொண்டை வலி.என் ஸ்வீட் வாய்ஸ்க்கு டாக்டர் கிட்ட வேற போகனுமா? பேசாம ஸ்டெப்சில்ஸ் வாங்கி வாய்ல போட்டு ரெண்டு நாலு என் பாக்கெட் மணிய சேவ் பன்னேன்.
நானும் பொறுத்து பொறுத்து பார்தேன்.ஒன்னும் வேலைக்கு ஆகல.வாய்ஸ் காக்கா பிரியாணி சாப்ட விவேக் மாதிரி ஆகிடுச்சு.சரி,இதுக்கும் மேல வெய்ட் பண்ணா அப்புறம் ஏ.ஆர்.ரகுமான்,இளயராஜாலாம் கோச்சுக்குவாங்கனு பக்கத்துல இருக்குர வெங்கடேஷ்வராக்கு போனேன்.
இதுக்கு மத்தியானமே இன்டெர்வல் பீரியட்ல அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி வச்சுடேன்(ஏன் ரேஷன் கடைக்குலாம் இந்த மாதிரி அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டெர் சிஸ்டம் கொண்டு வரக்கூடாது???).
“டாக்டர் 7மணிக்குலாம் வந்துருவாறு நீங்க சீக்கிரம் வந்துடுங்கனு”,ஒரு தெய்வம் சொல்லுச்சு.
சரினு 6.30க்குலாம் போய் சீட் போட்டேன்(நமக்க்கு கடமை தான முக்கிய்யம்.).
அங்க போனா எனக்கு ரெண்டாவது டோக்கன்(நமக்கு முன்னாடியே ஒரு காக்கா இருக்கு போல!!).
“ஏங்க டாக்டர் இன்னும் வரல???”,முதல் காக்கா எங்கிட்ட கேட்டுச்சு.
“வரல”,விவேக் வாய்ஸ்ல நான் சொன்னேன்.
டாக்டர் வந்தாரு..முதல் காக்கா உள்ள போச்சு.
உள்ள இருந்து பயங்கர சிரிப்பு சப்தம்…..
எனக்கு சந்தேகம் ..”ஒரு வேள பைத்தியகார ஆசுபத்திரிக்கு வந்து இருக்கோமா??”
கொஞ்சம்நேரம் கழிச்சு முதல் காக்கா வெளிய வந்துச்சு. நான் ஓடி போய் கதவு பக்கத்துல நின்னுகிட்டேன். பெல் அடிச்சுது..நான் உள்ள போனேன்.
“வாங்க வாங்க”,இது டாக்டர்.(கொயாலே ,நான் என்ன கல்யானத்துக்கா வந்து இருக்கேன்??).
“உங்க பேரு என்ன? எங்க படிக்குரீங்க??”.
“விஜயானந்தம்,அண்ணா யுனிவர்சிடில கம்பியூடர் சைன்ஸ் படிக்குரேன்”.
“எந்த வருசம்?”.
நான் மனசுல(அடங்கப்பா..நானே பேச முடியலனு வந்து இருக்கேன்..ஏண்டா என்ன கேள்வி கேட்டு சாகடிக்குற??).
“மூணாவது வருஷம்”.
நான் சொன்ன உடனே அவரு டார்ச் லைட் எடுத்து என் வாய்ல வச்சாரு. 3 வினாடி தான்..டார்ச் லைட் எடுத்துட்டாரு.
“தொண்டை கற கறனு இருக்கா?”.
“ஆமா டாக்டர்!”.
“எதுவும் முழுங்க முடியலயா??”.
“ஆமா டாக்டர்!!”.
“ஏதாவது சாப்டா தொண்டை வலிக்குதா???”.
“ஆமா டாக்டர்!!!”.
“பேச முடியலயா???”.
நான் மனசுல(“யோவ்..சாவடிக்காதயா..தொண்டை வலிச்சா எப்படியா சாப்பிட முடியும்? எப்படியா பேச முடியும்??).
“ஆமா டாக்டர்”.
“அப்போ பேசுரீங்க???”.
நான் மனசுல(வேனாம்..அழுதுடுவேன்!!!!).
“டாக்டர் எனக்கு என்ன ப்ராப்ளம்??”.
“உனக்கு இருக்குற எல்லா ப்ராப்ளமும் எனக்கும் இருக்கு..அத ஒன்னும் பண்ண முடியாது…ஹா ஹா ஹா…
“டாக்டர் நான் தப்பான் இடத்துக்கு வந்துடேன் போல..நான் கெளம்புரேன்”.
“அட உட்க்காருப்பா…”
“பின்ன என்ன டாக்டர்?? நானே ரொம்ப யோசிச்சு இங்க வந்தா..நீங்க ஒரு பேராசிடமால் கூட தரமாட்டீங்க போல..”.
“அட இது ஒரு வைரல் இன்ஃபெக்க்ஷன்பா,இது எனக்கும் இருக்கு..இதுக்கு மாத்திரைலாம் கிடயாது..உனக்கு வேனும்னா சொல்லு..பெய்ன் கில்லர் எழுதி தரேன்”.
“எழுதி தாங்க”.
“நான் மத்த டாக்டர் மாதிரி இல்லப்பா..எனக்கு என்ன ஆசயா உன் காச சாபிடனும்னு..இதுவே வேர யாருகிடாயாவது போய் இருந்தா இன்னேரம் 500ரூபாய் புடுங்கி இருப்பாங்க ஆனா நான் அப்படி இல்லப்பா”.
நான் மனசுல(ஹப்பா..காசு மிட்ச்சம்..நல்ல மனுஷனா இருக்காருபா..போகும் போது மிட்ச காசுல பரோட்டா வாங்கீட்டு போலாம்.).
“நீங்க கேட்டாலும் எங்கிட்ட 500ரூபாய் இல்ல ..400ரூபாய் தான் இருக்கு.”
“யு நோ ஓன் திங்க்?”.
“என்ன டாக்டர்??”.
“ஐ ஹேட் சிக்கென் பிரியாணி டுடே!!!”.
நான் மனசுல(“எனக்கு இது இப்போ ரொம்ப முக்கியம்”).
“நான் எப்பவும் 200 ருபீஸ் பிரியாணி தான் சாப்பிடுவேன்”.
நான் மனசுல(“ஏன் சாப்பிட மாட்டீங்க…எல்லாம் எங்க காசு தான??”).
“பட்,டுடே..என் நண்பன் சொன்னான்னு ஒரு லோக்கல் கடைல சாபிட்டேன் ..எனக்கும் வைரல் இன்ஃபெக்க்ஷன் வந்துடுச்சு”.
நான் மனசுல(“அந்த மகராசன் நல்லா இருக்கனும்”).
திடீர்னு நர்ஸ் கதவ திறந்து “டாக்டர் பேஷன்ட்ஸ் வெய்ட் பண்ராங்க”.
“ஒகே,விஜயானந்தம்..நாம நெஃஸ்ட் டைம் மீட் பண்ணலாம்”.
நான் மனசுல(நெஃஸ்ட் டைம் வர நான் என்ன லூசா??போயா வெண்ண..நீ காக்கா பிரியாணி சாப்ட கதை கேட்க நான் தான் கிடைச்சேனா??போய் வெற ஆள பாரு”).
“சரி டாக்டர்”.
வெளிய வந்தேன்,”நர்ஸ் டாக்டர் ஃபீஸ் எவ்ளோ??”..
“400ருபீஸ்”..
“கிழிஞ்சது… எனக்கு நானே சூனியம் வச்சுகிட்டேன்.” .
“தவளை தன் வாயால் கெடும்..அதுக்கு தொண்டை வலி வந்தாலும் சரி..வரலனாலும் சரி.”(நான் என்ன சொன்னேன்.).
“நீங்க கேட்க்குறது புரியுது..”.
“அப்போ பரோட்டா???”.
“நீங்க வேற..பஸ்சுக்கே காசு இல்ல..பரோட்டாவாம் பரோட்டா..”
hmmm adapavi hospital la evalo nadan
dhucha 😛
சொல்லிட்டா அப்புறம் நான் இங்க எத எழுத?
Reblogged this on விஜய்-In-ஜனனம்.