ஆலிவ் ரிட்லியும்… நாங்களும்… ( Turtle Walk)

என்னடா எழுதி ரொம்ப நாள் ஆச்சே ,நம்ம கிட்ட சரக்கு தீர்ந்து போய்டுச்சானு நினைச்சேன்..வசமா ஒரு மேட்டர் மாட்டிகிச்சு.

“Turtle Walk”,என் வயசு பசங்க இத இங்கிலீஷ் புக்ல படிச்சு இருப்பீங்க.ஆங்….அதேதான் ..Olive Ridley’s.

ஆலிவ் ரிட்லி

நெட்டில் தட்டினால் இதை பற்றி ஆயிரம் தகவல்கள் கொட்டோ கொட்டு என்று கொட்டி தள்ளும்.இருந்தாலும் ஒரு ஸ்மால் இன்ட்ரோ.
கடல் ஆமைகள் ஜனவரி முதல் ஏப்ரல் வரை கடற்கரையை நோக்கி படையெடுத்து வந்து ஒரு பாதுகாப்பான இடத்தில் தன்
முட்டைகளை இடும்.”45″ நாட்கள் கழித்து குஞ்சுகள் பொறித்து கடலில் கலக்கும்.இங்கே turtle walk எதற்கு என்றால்…முட்டைகள் சில நேரத்தில் மாமிச பட்சினிகளால் அழிக்க படலாம்,குட்டிகள் வெளிச்சத்தால் கவரக்கூடியவை ,அதனால் அவை வாகன வெளிச்சங்களிலும் தெரு விளக்குகளின் வெளிச்சத்திலும் கவரப்பட்டு வாகனங்களில் அடிபடலாம்.அதை தடுக்க தான் turtle walk.

முட்டைகளை சேகரித்து ,அதை பத்திரபடுத்தி குஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விடுவது தான் மகிழ்ச்சி கலந்த சிறு வேலை.

இனி என் அனுபவம் வித் மை நண்பர்கள் சேகர்,ஸ்ரீராம்,சங்கர்,சுந்தர்,சையத்,சுபாஷ்,சாய்.

பிப்ரவரி 1,” கடல் , டேவிட் போன்ற உலககாவியங்கள் ரிலீஸானது.அன்று தான் நாங்கள் turtle walk போக முடிவு
செய்தோம்.ஆனால் கடந்த ஒரு வாரமாக இறந்த ஆமைகள் நூற்றுக்கும் மேலே கிடைப்பதாகவும் அதனால் பப்ளிக் வாக் கேன்சல் செய்யப்பட்டதாகவும் Mr.Arun (http://www.sstcn.org/ ),தெரிவித்தார்.சரி நமக்கு கொடுத்து வைத்தது அவ்ளோ தான் என்று,க”டல்” ரொம்ப “டல்”ஆக இருக்கும் என்று கேள்வி பட்டதால் டேவிட் போலாம் என்று முடிவு ஆகிற்று.

ஆனால் சரியாக இரவு 7 மணி,சும்மா மெயில் செக் செய்தேன்,Mr.அருண் ,”ஹாய்,இன்று காலை ஒரு ஆமை கூட்டை கண்டு எடுத்தோம்,இன்றும் கிடைக்கும் என்று நம்புகிறோம் முடிந்ததால் வாங்க இன்று இரவு,ஆனால் நாங்க இன்னும் பப்ளிக் வாக் ஓபன் செய்யவில்லை ,நீங்க நெக்ஸ்ட் வீக் ரிவியூ இருக்குனு கூறியதால் இன்று வர அனுமதிக்கிறோம்”,இதை படித்த பின்பு “கிடைச்சதுடா விஸ்வரூபம் படத்துக்கு டிக்கேட்” என்பதுபோல் உடனே
கிளம்பிவிட்டோம் நானும் என் நண்பர்களும்.

கிளம்பிய பொழுது சில நண்பர்கள் மொக்கையா இருக்க போகுது என்றார்கள்,ஏன்? , நாங்களே அப்படி தான் நினைத்தோம்.ஆனால் அங்கே நடந்தவை அனைத்தும் என்றும் நினைவை விட்டு அகலாத நிகழ்வுகள்.

சரியாக 1௦.30க்கு காலேஜ் விட்டு கிளம்பி திருவான்மியூர் சென்று அடைந்தோம்.அப்புறம் தான் தோன்றியது இன்னும் “item”
வாங்கலையே என்று.உடனே கண்ணில் பட்ட lays,பிஸ்கட்,வாழைப்பழம் என்று வாங்கி நிரப்பிக்கொண்டு ஷேர் ஆட்டோ பிடித்து கபாலீஸ்வரர் ஆர்ச் சென்று அடைந்தோம் ,சரியாக இரவு 11.30 மணி.

Mr.அருண்க்கு கால் செய்தேன்,”சார் ,நாங்க கபாலீஸ்வரர் ஆர்ச் வந்துவிட்டோம்,இனி எப்படி வர?”.

அவர் கூறியது என்னை சற்று தடுமாற வைத்தது…..

“நடந்து தான் வரணும்……”,மொக்கை தான் ,ஆனால் எதிர்பாராமல் வந்ததால் சிரிப்பு வந்தது.அப்போவே முடிவு செய்தேன் இந்த இரவு formal ஆக இருக்காது என்று.

அவர் கூறியது போல் பீச் நோக்கி நடந்தோம்.சுற்றிலும் அழகிய வீடுகள்,பணக்கார தோரணையில் ஆனால் ரசனையுடன்.

பீச்சில் சிலர் மல்லாக்க படுத்து இருந்தார்கள்,அட அவர்கள் தான் sstcn குழுவினர்.

ஒரு பெண் எங்களை வரவேற்றார்,எங்களுக்கு ஆச்சரியம் இந்த நேரத்தில் ஒரு பெண் ,பீச்சில்.
“welcome டு sstcn,கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க 1 மணிக்கு வாக் ஸ்டார்ட் பண்ணாலாம்”.சிம்பிளாக முடித்து விட்டார்.

DSC_0006

அழகிய நிலவொளியில் கடல் அலைகள் முத்துகளை சுமந்து வருவது போல்,கரையை நோக்கி வந்தது,பாலாடை போர்த்தியது போல் கடல் பரப்பு நிலவொளியில் மின்னியது.அழகுக்கு அழகு சேர்ப்பது போல் நாங்கள் நிலவுடன் போட்டோ எடுத்துகொண்டோம் (சைடு கேப்ல சிக்ஸர் அடிச்சோம்ல 😛 ). 

DSC_0013

வாங்க பேசலாம் என்று MR.அருண் அழைத்தார்,25 வருஷமா இதையே சொல்லி சொல்லி போர் அடிச்சுடுச்சு (ஆம் sstcn ஆரம்பித்து 25 வருடம் ஆகிவிட்டது),நீங்களே எதாவது கேளுங்கள்.நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் மிகவும் ஆச்சரியம்
ஊட்டுபவை.அவை இங்கே,உங்களுக்காக.

1)கடல் ஆமைகளில் Olive Ridley ஒரு வகை,தான் எங்கு சென்றாலும் முட்டையிட தான் பிறந்த மண்ணுக்கே திரும்ப வரும்
(என்ன ஒரு பாசம்).

2)ஆமை முட்டை ரொம்பவும் சிறிய அளவில் இருக்கும் ( கோழி முட்டையைவிட சிறியது).கரு வளர புரதச்சத்து மிகவும் அவசியம் அதனால் அந்த முட்டையில் வெள்ளை கருவே கிடையாது,வெறும் மஞ்சள் கரு தான்.(ஆம்லேட் விரும்பிகள் கொஞ்சம் கதைக்கு வாங்க அப்புறமா ஆம்லேட் போட்டுக்கலாம்).

ஆம்லேட்

3)சராசரியாக ஒரு கூட்டினில் 80 to 120 இருக்கும்,சிலசமயம் 150 ,190,ஏன் 200 கூட கிடைக்கும்.
முட்டைகள் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக முட்டையின் அளவு குறையும்.

கூடு

4)அது தன் பின்னங்காலை வைத்து நீண்ட கழுத்து உடைய பானை போல் ஒரு கூட்டினை கடல் மணலில் பறிக்கும்.

5)ஆமை குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளிவர 45 நாட்கள் ஆகும்.

6)வருத்தமான விஷயம் என்ன வென்றால் அவ்ளோ முட்டைகளில் 10 டு 20 தான் தன கடைசி காலம் வரை வாழ்கிறது.

7)பிறந்த ஆமை தான் பிறந்த பின்பு அந்த கடல் மணலில் 10 நிமிடம் கூட இருப்பதில்லை ,உடனே கடலை நோக்கி சென்று
விடும்,ஆனால் அது உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் முட்டையிட (கிட்டத்தட்ட 30 வருடம் கழித்து ) தான் பிறந்த இடத்துக்கே வரும்.

இந்த விஷயங்கள் எங்கள் பயணத்தில் ஆர்வம் கூட்டின.

“நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலிகள்,கிட்டத்தட்ட் மூன்று வருடம் கழித்து நாம் walk ஆரம்பிக்கும் இடத்துலேயே ஒரு நெஸ்ட் கிடைச்சு  இருக்கு வாங்க பார்க்கலாம்”

இந்த செய்தி எங்களுக்கு பூஸ்ட் குடுத்து மேலும் உற்சாகம் ஊட்டியது.

DSC_0040

DSC_0039அந்த கூடு நீளமான கழுத்து,குறுகலா இருந்துச்சு ,ஆமை வந்து போன தடம் intrack மற்றும் out track வைத்து அவர்கள்
கூட்டினை கண்டு பிடித்தார்கள்.அழகாக அதனை தோண்டியதும் உள்ளே அடுக்கி வைத்தால் போல் அடுக்கு அடுக்காக
முட்டைகள்.பார்க்கவே அழகோ அழகு.முட்டைகளை எடுத்து ஒரு துணிப்பையினில் போட்டார்கள்.முட்டை ரொம்ப மிருதுவாக  இருந்தது.ஒரு பாலிதீன் பையில் தண்ணீர் நிரப்பியது போல் அவ்வளவு soft.மொத்தம் 85 முட்டைகள்.

DSC_0041

இடுப்பு டான்ஸ்,பாலே டான்ஸ் தெரியும் …Turtle டான்ஸ்  (http://www.angelfire.com/mi2/turtledance/index.html) தெரியுமா உங்களுக்கு ?… ஆமை முட்டை இட்டவுடன் தன்  கூட்டின் மேல் ஆடும் நடனம் தான் Turtle டான்ஸ்.மணல் பரப்பை சமபடுத்த அப்படி செய்யும்.

நாம் மணலை மூடினால் கூட ஈசியாக கண்டுபிடித்து விடலாம் ஆனா ஆமை மூடினால் அது வந்து போன தடத்தை வைத்து மட்டும்  தான் கண்டுபிடிக்க முடியும்.அந்த தடம் அழிந்தால் ,நோ வே!!!.

முட்டைகளை எடுத்த பின்பு அவர்கள் அக்குழியை மூடினார்கள் ,தடத்தினை அழிக்க சொன்னார்கள் .நமக்கு தான் எதையும் ஈசியாக  அழிக்க வருமே,நன்றாக ஆடி அழித்தோம். (நாளை திரும்ப வரும் பொழுது அதே தடத்தை பார்த்து அதே குழியை திரும்ப தோண்ட  முற்பட்டால் ?? ,அதனால் தான்).

பின்பு அவர்களை பின் தொடர்ந்தோம்,வழி எங்கும் இறந்த ஆமைகள் ,அவை விசை படகு மற்றும் மீன் வலைகளில் அடிபட்டு கரை ஒதுங்கியவை.

DSC_0067

கொஞ்சம் செய்திகளை கூறுகிறேன் …Mr.அருண் கூறியது தான்.

1) ஆமை தான் பறிக்கின்ற குழி சரிபட்டு வராது என்று தோன்றினால் அல்லது ,கரை மீது ஏற முடியாவிட்டால் வேறு இடத்தில் தோண்டும் அல்லது சென்று விட்டு மூன்று நாட்க்கள் கழித்து வரும்.

2)முட்டை இட்டவுடன் அதன் கடமை முடிந்தது, திரும்பி கூட பார்க்காமல் சென்று விடும் ( இப்போ தெரியுதா நம்ம அம்மா அப்பா  அருமை???)

3)அது இட்ட 5 மணி நேரத்தில் முட்டைகளை hatchery க்கு மாற்றி விடுவார்கள்,ஏனென்றால் 5 மணி நேரத்திற்கு பிறகு முட்டை ஓடு  இருகி ,position பிக்ஸ் ஆகிவிடும்,அப்புறம் மாற்றுவது அதை கொல்வதற்கு சமம்.

அப்புறம் 2 மணி நேரம் நடந்தோம் ஒரு கூட்டினை கூட காண முடியவில்லை..30 நிமிடம் ரெஸ்ட் விட்டார்கள்.கடல் மணலில் மல்லாக்க படுத்து நிலவை ரசித்தோம்,அது எங்கள் கூடவே எங்களை பின் தொடர்ந்து வருவது போல் தோன்றியது.கருமேகங்கள்,நிலவை போர்வை போற்றிய சிறு குழந்தை போல் மாற்றியது.அது ஒரு சொல்ல முடியாத பரவசமான தருணம்,மனம் சுத்தமாக அமைதியாக இருந்தது.

அப்பொழுது ஏதோ சப்தம் ,ஒரு காகிதம் கசங்குவது போல்…..

நான் உணர்ந்துகொண்டேன்,”பயபுள்ளைக நம்மள விட்டுட்டு தின்னுட்டு இருக்காங்க….நிலவா? snacks? என்று வரும்போது “ஐ chose snacks”,நமக்கு கடமை தான் முக்கியம்“.

நல்லா சாப்பிட்டுவிட்டு ,”கடவுளே இன்னும் ஒரு கூடாவது கிடைக்கணும் என்று வேண்டிக்கொண்டு ஆரம்பித்தோம்“.
ஏனென்றால் என் நண்பன் அசோக் போன வாரம் சென்று விட்டு ஒரு முட்டை கூட கிடைக்காமல் திரும்பி வந்து
இருக்கிறான்,இருந்தாலும் அந்த இரவு நான்றாக இருந்தது என்றான்.

ஆனால் நாங்கள் செகண்ட் இன்னிங்க்ஸ் ஆரம்பித்த சில நேரங்களிலேயே ஒரு கூட்டினை கண்டோம்…ஹப்பா project  success.அந்த கூட்டில் 120 முட்டைகள் கிடைத்தது என்று நினைக்கிறேன்.அதையும் அவர்கள் தான் தோண்டினார்கள்.

டிப்பரென்ட்

மேலும் நடந்தோம்…எதிர்பார்ப்பு கூடியாது…அங்கே அதிசயம் எங்களுக்காக காத்து இருந்தது…ஒன்றல்ல இரண்டல்ல….ஒன்பது கூடுகள் வரிசையாய்…சீரிய கால் இடைவெளியில்.125,105,110,153,126,163….என் ஒவ்வொரு கூட்டுக்கும் முட்டைகளின் எண்ணிக்கை மாறுபட்டு இருந்தது.

DSC_0082

அந்த ஆமைக்கு தன் வயிற்றிநில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏறாற்போல் கூட்டின் அளவை பெரிதாக
கட்டுகிறது ,எப்படி அதற்க்கு இந்த சாதுரியம்??? புரியாத புதிர்.

அங்கே இருந்த organiserகள் மகிழ்ச்சியில் ஆட்டம் போட்டார்கள் …கிட்டத்தட்ட் நான்கு வருடம் கழித்து இவ்வளவு கூடுகள்,
“it’s a record students,you people are so lucky”,என்று அவர்கள் கூறியவுடன் நாங்கள மகிழ்ச்சியின் எல்லைக்கே
சென்றோம்.

நாங்கள்

அவர்கள் நாங்கள் குழியினை தோண்டவும் முட்டைகளை பைகளில் அடுக்கவும் வாய்ப்பு கொடுத்தார்கள்,நாங்கள் எடுத்த ஒன்பதாவது  கூட்டினில் அந்த சீசனில் அதிக பட்சமாக 153 முட்டைகள்…மேலும் ஒரு luckiest மொமென்ட்.அனைத்தையும் சேகரித்து முடிக்க காலை 5.30 மணி ஆகிற்று.

நாங்கள் சேகரித்த 153 முட்டைகள்…

மொத்தம் 1250+ முட்டைகள் ,10 கூடுகள்…நாங்கள் hatchery நோக்கி நடந்தோம்.எந்த கூட்டினில் எவ்வளவு முட்டைகள் ,அதன் அளவு  என்ன ,போன்ற அனைத்தும் குறித்து வைத்து இருந்தோம்.hatcheryஇல் அதே அளவில் தோண்ட பட்ட பத்து குழிகளில் முட்டைகளை  வைத்து அதன் மேல் மணல் மூடி நாங்களும் ஆடினோம் “Turtle Dance”.

அவ்வளவும் முட்டைகள்…

hatcheryஇல் சாய்…தான் சேகரித்த முட்டைகளுடன்

10km மீட்டர் பீச் மணலில் நடந்தேன் என்று கூறினால் என் கால்கள் கூட என்னை நம்பாது,களைப்பே தெரியவில்லை .hatchery விட்டு வெளியே வரும் பொழுது சூரியன் எங்களை வரவேற்றது….நிலா விடை பெற்றது.ஆனால் 1250+ உயிர்களை காப்பாற்றிய மகிழ்ச்சி இன்னும் எங்களை விட்டு விடைபெறவே இல்லை.

அந்த காலை பொழுதில்…மெதுவாக நடந்து பெசன்ட் நகரில் ஒரு டீ குடித்து விட்டு பஸ் ஏறினோம்.திரும்ப மார்ச் மாதத்தில் நாங்கள் செல்வோம்,நாங்கள் சேகரித்த முட்டைகள் ,புதிததாய் பிறந்து கடலில் செல்லும் அழகை காண.முடிந்தால் சென்று வாருங்கள் வாழ்வில் ஒரு முறையாவது “Turtle walk”.

இதை பொறுமையுடன் படித்தற்கு நன்றி!!!!.

Photo Courtesy : C.Subash

 

குறிப்பு: அந்த sstcn குழுவில் பெண்களும் உள்ளனர் ,அதனால் பெண்களும் விரும்பினால் சென்று வரலாம் மேலும் விபரங்களுக்கு

விசிட்:http://www.sstcn.org/

1. Arun – 9789864166

2. Akila – 9940300200

Or email  at sstcnchennai@gmail.com

Comments
4 Responses to “ஆலிவ் ரிட்லியும்… நாங்களும்… ( Turtle Walk)”
  1. hajas says:

    supprb anna puthu anupawama irunthichu

    • நன்றி நண்பா..உன் முகபுத்தகத்தில் ஷேர் செய்து இதை மற்றவர்களும் படிக்கும் வண்ணம் செய் டா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: