அப்பாவின் பயம்!!!
பெண் பார்க்க வந்த போது , அப்பாவுக்கு தேநீர் தர – பயந்தாள் அம்மா;
நிச்சயத்தன்று அப்பாவின் கைக்கோர்க்க – பயந்தாள் அம்மா;
கலியாணத்தன்று அரைப்பவுன் குறைந்ததில் அப்பாவின் ஆத்திரம் பார்த்து முதன் முதலில் – பயந்தாள் அம்மா ;
முதல் சமையல் , தான் செய்த பலகாய் குழம்பு அப்பாவின் கோவத்தால் சுவற்றை வர்ணம் செய்ய – பயந்தாள் அம்மா ;
பேறு அடைந்த காலத்தில் அப்பா கேட்ட ஆண் பிள்ளை பிறக்க வேண்டி – பயந்தாள் அம்மா;
பெண் பிள்ளை பிறக்க , குடும்பம் தழைக்கவில்லையே என அப்பா ஏச – பயந்தாள் அம்மா;
ஒரு வழியாக தன் பிள்ளையை கட்டிகுடுக்க , சொத்தெல்லாம் பிறத்தியார் வீட்டுக்கு போய்விட்டதே என அப்பாவின் தீ சொற்கள் வீட்டை அலங்கரிக்க – பயந்தாள் அம்மா;
அம்மா வயோதிகத்தால் படுத்த படுக்கையாக – முதன் முதலில் அம்மா இல்லாத வாழ்க்கையை எண்ணி – பயந்தார் அப்பா!!!.
ஆணாதிக்கம் மிகுந்தவருக்கு வரலாமா பயம் 🙂
ஆணாதிக்கம் பெண் இருக்கும் வரையில் தான்… பெண் போனபின் யாரிடம் ஆதிக்கம் செலுத்த ?
அனைத்தும் சக்தி மயம்…