முதுமை போற்றுதும்!!!
சொல்லெனா வார்த்தைகள் ,
கேட்க ஆளில்லை.
கால்களில் வன்மை இருந்தும்,
திணிக்கப்பட்ட ஓய்வு.
விலைமதிப்பில்லா அனுபவம்,
அழிந்து வரும் உயிரினம் பட்டியலில்.
உழைக்க விரும்பும் மனம் ,
கூலிக்காக அல்ல.
மடிக்கணினியில் மகனின் பிரவேசம்,
தொடும் தூரத்தில் தான் என்று சென்றவனவன்.
வைத்திருக்கும் கதைகள் ஆயிரம்,
பேரன் பேத்தியின் வரவு அருகில் இல்லை.
சொந்தங்கள் தான் செல்வங்களா ?
எழுதுகிறேன் என் வரிகளை – படிக்கட்டும் ஏதோ ஒரு பிள்ளை.
உழுகிறேன் என் நிலங்களை – உண்ணட்டும் ஏதோ ஓர் உயிரினம்.
கற்பிக்கிறேன் என் பாடங்களை – சென்று சேரட்டும் சாதி கடந்து.
ஒருநாள் உலகம் சொல்லும் – முதுமை போற்றுதும்!!!
-விஜ
# வைத்திருக்கும் கதைகள் ஆயிரம்,
பேரன் பேத்தியின் வரவு அருகில் இல்லை #
இக்காலச் சூழலினைப் பேசும் அழுத்தமான பதிவு !! …
# முதுமை போற்றுதும்!!!
உங்கள் வருகைக்கு நன்றி!!!