ஆறில் வளையாதது….
ஒரு ஆறு வயது சிறுமியால் என்ன செய்ய முடியும் ?. நாம் ஆறு வயதில் என்ன செய்து கொண்டு இருந்தோம் ?. எனக்கு ஞாபகம் உள்ள வரையில் விளையாடிக்கொண்டும் , ஊர் சுற்றிக்கொண்டும் இருந்தேன்.இருந்து இருப்பேன்.
ஆனால் ஒரு ஆறு வயது சிறுமி, தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுமி, தன் தகப்பனை திருத்தி குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து இருக்கிறாள். இப்பொழுது அவள் தகப்பன் கேரளாவில் வேலை செய்து கொண்டு இருக்கிறார்.
அதே சிறுமி, தன் தகப்பனை கட்டாயப் படுத்தி தன் வீட்டில் கழிப்பறை கட்ட வைத்து இருக்கிறாள். எங்கு இருந்து வந்தது இந்த துணிச்சல்?.ஒரு ஆறு வயது சிறுமிக்கு எங்கு இருந்து வந்தது இந்த அறிவு?

Dharani – the 6 year old girl who made her father to build a toilet.
பள்ளியில் இருந்து தான். அவளது ஆசிரியர் தூய்மையின் மகத்துவத்தை தினசரி பள்ளியில் சொல்லித்தர அந்த சிறுமி அதை கடைப்பிடித்து இருக்கிறாள். ஒரு பள்ளியால் ஒரு ஆசிரியரால் எதுவும் முடியும்.
வெறும் மதிப்பெண் மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஒரு நல்ல குடிமகனாக ஆக முடியாது. அதனால் தான் கல்வி உரிமைச்சட்டம் , ஆசிரியர் குழந்தை விகிதம் , பள்ளியின் கட்டமைப்பு போன்றவற்றை வலியிருத்துகிறது . ஒரு வகுப்பில் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம். ஒரு ஆசிரயருக்கு என்று ஒரு எல்லை உண்டு, அவரால் குறிப்பிட்ட சுமைக்கு மீறி தாங்க முடியாது. எந்த ஒரு பொருளும், உயிரினமும் அதன் அளவிற்கு மீறி சுமை வைத்தால் அது வலுவிழந்து போகும்.
அதுபோல் தான் ஆசிரியர்க்கும், பல பள்ளிகளில் வகுப்பில் அளவிற்கு மீறி குழந்தைகள் சேர்க்கபடுகின்றனர். மேலும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்க்கு பாடம் அல்லாத வேலைகளான சர்வே , ரிபோர்டிங் போன்ற வேலைக்கள் கொடுப்பதால் அவர்களின் வேலை சுமை அதிகரித்து , குழந்தைகளை சரிவர கவணிக்க முடியாமல் போகிறது.
மேலும் ஆசிரியர் பயிற்சியில் வாழ்க்கைக் கல்வியும் சேர்க்கப்பட்டால் அது குழந்தைகளுக்கு மிகவும் பயன்படும். டிவி விளம்பரமும், ஆகப்பெரிய மாநாடும் செய்ய முடியாததை ஒரு ஆசிரியரும் ஒரு சிறுமியும் செய்து விட்டார்கள். இது இந்தியா முழுக்க நடக்க வேண்டும் என்றால் சுத்தமும் ,சுகாதாரமும் பாட ப்புத்தகத்தில் இணைக்கப்பட வேண்டும். ஏனெனில் “ஆறில் வளையாதது, ஐம்பதிலும் வளையாது” .
Source: The hindu